நான்கு சிறுமிகளைச் சீரழித்த காமுக வைத்தியர் பொலிசாரால் அதிரடிக் கைது..!

0

தென்னிலங்கையில் நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை செனரத்புர கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

மரதன் ஓட்டப்போட்டிக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைக்காக குறித்த மாணவிகள் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வைத்தியர் தங்களைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

18, 14 மற்றும் 17 வயதான இரண்டு மாணவிகளுமே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைகளுக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.