வவுனியா அரச அதிபரின் அதிரடி; புதிய பிரதேச செயலாளர் இவர்தான்..!

0

வவுனியாவின் புதிய பிரதேச செயலாளராக, மாவட்ட உதவி அரசாங்க அதிபராக கடமையாற்றி வரும் திரு கமலதாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை வவுனியா நகர பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய பிரதேச செயலரை மாவட்ட செயலகத்தில் இணைக்குமாறு தெரிவிக்கப்பட்ட போதும் இன்று வரை அவர் கடமைக்கு அறிக்கையிடவில்லை.

இந் நிலையில் பொது நிர்வாக அமைச்சின் ஆலோசனையின் பேரில் அரச அதிபரால் எதிர்வரும் 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக திரு. சிவபாதசுந்தரம் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என்பதுடன் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரையே அரச அதிபராக நியமிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.