இலங்கையில் 12 வயதான சிறுமியை 50 வயதை கடந்த 5 போ் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

0

தென்னிலங்கையில் 12 வயதான சிறுமி ஒருவரை 50 வயதை கடந்த 5 போ் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குருநாகல்- தம்புள்ளை பகுதியில் கொக்கறெல்ல பகுதியில் இடம் பெற்றிருக்கின்றது.

குறித்த 12 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, 50 வயதற்கு கடந்த 5 போ் தொடா்பாக சிறுமியின் சகோதாி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸாா் சிறுமியை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்ததுடன், பலாத்காரம் செய்த 4 பேரை கைது செய்துள்ளனா்.

அத்துடன் தலைமறைவாகியுள்ள மேலும் ஒருவரை பொலிஸாா் கைது செய்துள்ளதாகவும் தென்னிலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன