பதுளை, பசறை – மடுல்சீமைக்கு இடையிலான 6’ம் கட்டை பகுதியில் அரச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இவ் உயிரிழப்புகள் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் இவ் விபத்தில் பலியானோர் தொகை 12ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20க்கும் அதிகமானோர் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
விபத்தில் பலியாகிய எம் தாயக சொந்தங்களின் ஆத்ம சாந்தியடைய தமிழ்பொறி தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.