வெகு சிறப்பாக நடைபெற்ற புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் தசாப்த விழா..!

0

வவுனியா வடக்கு வலயத்தின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் தசாப்த விழா, கல்லூரியின் அதிபர் திருமதி கமலாம்பிகை சொக்கலிங்கம் தலைமையில் நேற்றைய தினம் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத் துறை அமைச்சின் கெளரவ செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டார்.

அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ, முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராஜா, எம்பி நடராஜ், பிரதேச சபை உறுப்பினர் அருள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.