இனவாத விஷத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய தமிழ் சட்டத்தரணிகள் எங்கே?

0

இலங்கையில் கிழக்கிஸ்தான் என்ற பெயரில் இஸ்லாமிய இராட்சியம் ஒன்று உருவாகும், அது தென் கிழக்கிலங்கை எனப்படுகின்ற கல்முனை நகரை மையமாக கொண்ட பிரதேசங்களிலிருந்தே ஆரம்பமாகும் என்றும் அதற்கான அடித் தளங்கள் மரணமடைந்த அஷ்ரப்பின் தலைமையில் இடப்பட்டுள்ளது என்றும் ஐக்கிய இலங்கை மீது அக்கறை கொண்டுள்ள பலரால் எச்சரிக்கப்பட்டுள்ள விடயமாகும்.

இவ் எச்சரிக்கைகளுக்கு சான்று கூறும் விதமாக கடந்த 01.01.2020 அன்று இலங்கையின் தேசியக் கொடி அவமதிக்கப்பட்டு தேசியகீதம் இசைப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட சம்பவமொன்று நிந்தவூர் கமநல கேந்திர மதிதிய நிலையத்தில் இடம் பெற்றுள்ளது.

அனைத்து அரச ஊழியர்களும் முதலாம் திகதியன்று தேசியக்கொடியேற்றி தேசியகீதம் இசைத்து உறுதியுரை எடுத்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்திருந்த போதும், இந்நாட்டையும் அரச நிர்வாகத்தையும் ஏமாற்றி ஊழியர்களை அவ்வாறு செய்ய விடாது அந்நிலையத்தின் தலைவரும் கமநல உத்தியோகித்தருமாகிய ஐ.எல்.ஏ கார்லிக் தடுத்துள்ளார்.

தேசிய கீதத்தை இசைக்காது, இசைக்குமாற் போல் வாயசைத்து அதனை ஆவனப்படுத்தும் நயவஞ்சக செயலில் ஈடுபட்ட போது, அச்செயற்பாட்டினை பார்த்து நகைத்த பெண் ஊழியர் ஒருவரை காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளார் கார்லிக்.

இலங்கையில் ஷரியா சட்டம் இங்கு அமுலுக்கு வரும் வரை கார்லிக் இலங்கையில் சட்ட திட்டங்களையும் அதன் தேசிய கீதத்தையும் மௌனமாக்க முயற்சிக்கின்றானா என்ற கேள்விக்கு பதில் தேடப்பட வேண்டும்.

இக்கேள்விகளுக்கு பதில்தேடி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை தேடிக்கொடுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய பொலிஸார் இன்று ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த முதலாம் திகதி மேற்படி நபரால் தாக்குதலுக்குள்ளான பெண் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதை பொலிஸார் காலம் கடத்தி வருவதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பாக பொலிஸ் உயர் மட்டத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்டுள்ள போதும், சம்மாந்துறை பொலிஸார் சந்தேக நபர் வீட்டில் இல்லை என உயர் மட்டத்திற்கு அறிவித்துள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என்றும் அவர்கள் பக்கசார்பாக கடமையாற்றுகின்றார்கள் என்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பாரிய குற்றச்சாட்டொன்றை முன்வைக்கின்றனர்.

அத்துடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் உடன் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ் – முஸ்லிம்கள் என்ற பாகுபாடின்றி சேவையாற்றக் கூடியோர் நியமிக்கபட வேண்டும் என அம்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதேநேரம் குறித்த பெண் தொடர்பாக சமூகத்தின் பல்வேறு மட்டத்தினர் குரல்கொடுத்து வருகின்ற போதும் தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து சுகபோக வாழ்கை வாழ்ந்து வருகின்ற அரசியல் பிரமுகர்கள் எவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான நியாயத்திற்காக முன்வரவில்லை என்பது கண்டனத்திற்குரியதாகும்.

நிந்தவூர் கமநலசேவைகள் மத்திய நிலையத்தில் 3 தமிழ் பெண்கள் கடமையாற்றுகின்றனர். அவர்கள் முகாமைத்துவ உதவியாளர்களாக கடமையாற்றுகின்றனர். அதே நிலையத்தில் முஸ்லிம் பெண்கள் பலரும் முகாமைத்துவ உதவியாளர்களாக கடமையாற்றுகின்ற அதே தருணத்தில் முஸ்லிம் சிற்றூழியர்களும் கடமையாற்றுகின்றனர்.

இருந்த போதும் சிற்றூழியர்கள் மேற்கொள்ள வேண்டிய மலசலகூட துப்பரவு போன்ற கருமங்களைக் கூட தமிழ் பெண்களை மேற்கொள்ளுமாறு மேற்படி நபர் பணித்துள்ளதாக அறிய முடிகின்றது.

இது அப்பட்டமாக அவர்களது மனித உரிமைகளை மீறும் செயலென்பதுடன் அதிகார துஷ்பிரயோகமுமாகும். இப்பெண் தாக்கப்பட்ட விடயத்தில் ஆதாயம் தேடும் நோக்கில் ஒரு சில அரசியல்வாதிகள் இறங்கியிருந்தாலும் இதுவரை எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

எனவே உடனடியாக குறித்த பெண்கள் கார்லிக் க்கு எதிராக மனித உரிமைகள் மீறல் வழக்கொன்றினை தொடர்வதற்கு சமூகத்திலிருந்து அவசர உதவியையும் மனத்துணிவையும் வழங்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்காக இராப்பகலாக வழக்காடிய சுமந்திரன், ஒரு நாடு இரு தேசம் என நடைமுறைச் சாத்தியமற்றவைகளை கூறித் திரியும் முன்னணியின் சட்டத்தரணிகள் தமிழ் பெண்களின் மானம் மற்றும் அடிப்படை உரிமைகளை காக்க முன் வருவார்களா? என தமிழ்பொறி கேள்வி எழுப்புகின்றது.