ஐதேகவின் புரட்சி நடிகர் ரஞ்சன் ராமநாயக்க கைது..!

0

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் கொழும்பு மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த கைது இடம் பெற்றுள்ளது.

கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு..!

ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அனுமதியற்ற கைத்துப்பாக்கியொன்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அனுமதிப் பத்திரம் காலாவதியான கைத்துப்பாக்கி, 118 தோட்டங்கள், ஹார்ட் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கியை அரசாங்கம் வழங்கிய போதிலும், 2016 ஆம் ஆண்டில் உரிமம் இரத்து செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் உரிமம் இல்லாததால் பறிமுதல் செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.