அதிக அரச விடுமுறைகளை கொண்ட வருடமாக இவ் வருடம்..!

0

வருடத்தின் அதிக வாராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக இவ் வருடம் அமைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி 2020 ஆம் ஆண்டில் 23 அரச விடுமுறைகள் உள்ளன. இவற்றில் 14 விடுமுறைகள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் வந்துள்ளது.

இம் மாதத்தின் போயா தினம் அடுத்த வெள்ளிக் கிழமையாக காணப்படுவதுடன் மஹா சிவராத்திரி தினம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி என்பதும் குறிப்பிடத்தக்கது.