நபர் ஒருவரால் மூன்று பெண்கள் பாலியல் வல்லுறவு..!

0

கடந்த சனிக்கிழமை ரென் (Rennes – Ille-et-Vilaine) நகரில் வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதுடைய குறித்த நபர், ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என அறிய முடிகிறது.

குறித்த நபர் கடந்த நவம்பர் 4 ஆம் திகதி Rennes நகரின் Bourg-l’Évesque நகரில் வைத்து நள்ளிரவில் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.

பின்னர் டிசம்பர் 15 ஆம் திகதி Brest (Finistère) நகரில் மற்றுமொரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மூன்றாவது பெண்ணை பாலியல் பலாத்கார செய்துகொண்டிருத போது குறித்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னைய குற்றங்களுடன் DNA ஆதாரங்கள் ஒத்துப் போவதாக அறிய முடிகிறது. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.