கோட்டாவின் அதிரடி உத்தரவால் சாரதி அனுமதிப் பத்திரங்கள் புதிய நடைமுறையில்..!

0

கனரக வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கண் பரிசோதனையை மட்டும் பெற்றுக் கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பயணிகள் போக்குவரத்து அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் நேற்று (31) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.

அந்தவகையில் கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு மட்டுமே முழுமையான மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்.

ஆனால் இலகுரக (சிறிய) வாகனங்களுக்கான சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு கண் பார்வைப் பரிசோதனை சான்றிதழ் மட்டும் போதுமானது என நடைமுறைப் படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.