அமல் எம்.பியின் ரவுடி கும்பலால் பலர் இரத்த காயங்களுடன் வைத்திய சாலையில்..!

0

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் ஆதரவாளர்கள், செங்கலடி பகுதியில் மது போதையில் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் ஆதரவாளர்கள், தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்கள் மது போதையில் அட்டகாசம் புரிந்துள்ளதாகவும், அங்கிருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்திற்கு ஏறாவூர் பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாதாரண மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் நியமனத்தை வைத்துள்ள நிலையிலேயே இவ்வளவு அராஜகத்தில் ஈடுபடும் இவர்களுக்கு அமைச்சுப் பதவியையும் வழங்கினால் மக்களின் நிலை என்ன என மட்டக்களப்பு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.