எதிர்வரும் 3ம் திகதியுடன் முடிவுக்கு வரும் மகிந்த ஆட்சி???

0

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரையை தோற்கடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2020 ஜனவரி 3ஆம் திகதி, பாராளுமன்றம் கூட்டப்படும் போது, ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படும் கொள்கை விளக்க உரையை அல்லது அக்கிராசன உரையை நிறைவேற்றிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சவால் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லை. ஆகையால், பாராளுமன்ற கூட்டத் தொடரை நிறைவுக்கு கொண்டு வரும் முயற்சியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை மாற்ற முடியாது என தெரிவித்துள்ள திஸ்ஸ அத்தநாயக்க, ஒரு மக்கள் ஆணையின் ஊடாக, இன்னொரு மக்கள் ஆணையை அடிபணிய செய்ய முடியாது என்றும், இது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டும் அல்லாமல் புதிய ஜனாதிபதி கோட்டாபய , மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமையும் சட்டவிரோதமானது என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக முன்னின்று உழைத்தவர்களில் திஸ்ஸ அத்தநாயக்க பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.