மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; இன்று முதல் அரசின் புதிய சலுகைகள்..!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அரசினால் வழங்கப்பட்ட வரி சலுகை நிவாரண பொதி இன்று(1) முதல் அமுலுக்கு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது குறித்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது.

இதுதொடர்பாக தகவல், தொடர்பாடல், தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில், நேரடி வரி சலுகை தொடர்பான தீர்மானங்கள் நாளை முதல் அமுலுக்கு வருவதாக தெரிவித்தார்.

அத்துடன் அதற்கமைவாக பொருளாதார சேவைகள் கட்டண வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான நிறுவனங்களின் பற்று வரி பங்கு சந்தை வருமானத்தின் அடிப்படையில் அறவிடப்படும் மூலதன வரி, வருமானத்திற்கான வரி, சேவை வரி, சேமிப்பு வருமானம் மீதான வரி 28 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , மாடிக் கட்டடங்களுக்கான வரி, தொலைத் தொடர்பு வரியும் 25 சதவீத குறைக்கப்படுவதுடன் வெளிநாட்டு தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கான வரி மற்றும் தாவர உற்பத்தி தொடர்பான வரி போன்றன முழுமையாக இன்று முதல் குறைக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.