கோட்டாவின் ஆட்சியில் சிறையிலிருந்து தொலைபேசியில் கப்பம் கோரிய குற்றவாளி..!

0

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் போராளிகள், போர்க் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் குற்றச் செயல்களில் குற்றஞ் சாட்டப்பட்டோரின் குடும்பங்களுக்கு புலனாய்வாளர்கள் எனக் கூறி அலைபேசி ஊடாக கப்பம் கோரப்பட்டது.

பொலிஸ் புலனாய்வாளர்கள் பேசுகின்றோம் எனத் தெரிவிக்கும் அவர்கள், குடும்பத்தில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைக் கைது செய்ய உத்தரவு கிடைத்துள்ளதாகவும் கைது செய்யாமல் விடுவதற்கு தாம் கூறும் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடுமாறு கோரியுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் , வங்கி கணக்கு உரிமையாளரை கைது செய்துள்ளனர். தொலைபேசியில் மிரட்டியவர் சிறையில் இருந்தே தொலைபேசியில் மிரட்டியுள்ளார் என்பதனையும் பொலிசார் விசாரணைகள் ஊடாக கண்டறிந்துள்ளனர்.

சிறைக் காவலரின் அனுமதியின்றி எவ்வாறு தொலைபேசி சிறைக்குள் வந்தது? அல்லது இக் கப்பம் கோரலுக்கு சிறைச்சாலை காவலர்களும் உடந்தையா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.