முன்னாள் முதலமைச்சரால் வன்னியில் 500 பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

0

மாற்றுத் திறனாளிகளின் 350 பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி “ஒளிரும் வாழ்வு” நிறுவனத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன் முல்லைத்தீவில் 31.12.2019 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.

அத்துடன் மாற்றுத் திறனாளிகளின் 150 பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன் பரந்தனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கட்சியின் செயலாளரும், பிரதம நீதியரசருமாகிய சீ.வி. விக்னேஸ்வரன் ஐயா கலந்து கொண்டார்.