வட மாகாண ஆளுனரை வரவேற்கத் தயாராகும் வன்னிப் பெருநிலம்..!

0

இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்ற முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை வரவேற்க வன்னி மண் தயாராகி வருகின்றது.

இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவிடமிருந்து நியமனக் கடிதத்ததை பெற்றுக் கொண்ட ஆளுனர் சாள்ஸ், எதிர்வரும் 2.12.2019 அன்று கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

இது தொடர்பான வரவேற்பு நிகழ்வினை வவுனியா மாவட்டப் பொது அமைப்புக்களும், வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களும் ஏற்பாடு செய்துள்ளனர்.

தற்போது வடமாகாண ஆளுனராக நியமனம் பெற்றுள்ள திருமதி சாள்ஸ் கடந்த இறுதி யுத்த காலத்தின் போது சுமார் மன்று இலட்சம் மக்களை வரவேற்று உபசரித்து மிகக் குறுகிய காலத்தில் மீளக் குடியேற்றி சாதனை புரிந்த பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பணி சிறக்க தமிழ்பொறி நிர்வாகமும் உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.