வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மீது வாள் வெட்டுத் தாக்குதல்???

0

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது நேற்று (29) இரவு இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது பாதுகாவலர் வவுனியா பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா – பாவக்குளம் பகுதியில் மஸ்தான் பயணித்தவேளை அப் பகுதியில் நின்ற சிலர் குறித்த வீதியால் செல்ல முடியாது என முரண்பட்டுள்ளனர். அத்துடன் வாள்களால் அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

இதன் போது பாதுகாவலர்கள் தாக்குதல் முயற்சியை தடுக்க முற்பட்ட போது பிரதான பாதுகாவலர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.