24வது நாளாகத் தொடரும் வேலை நிறுத்தம்; பரிசை முற்றுகையிட்ட தொழிலாளர்கள் ..!

0

நேற்று சனிக்கிழமை பரிசில் தொழிலாளர்கள் மற்றும் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றைய வேலை நிறுத்தம் தொடர்ச்சியான 24 ஆவது நாள் வேலை நிறுத்தமாக பதிவாகியுள்ளது. 1995 ஆம் ஆண்டு இடம் பெற்ற வேலை நிறுத்தம் 22 நாட்கள் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில் அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு, வேலை நிறுத்தம் தொடர்கிறது. நேற்று சனிக்கிழமை 300 வரையான மஞ்சள் மேலங்கி போராளிகளும், CGT, FO, Solidaires மற்றும் FSU ஆகிய தொழிற் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

13:30 மணி அளவில் கார்-து-நோர் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் பின்னர் அங்கிருந்து சத்தலே நிலையம் நோக்கி பயணித்தனர்.

”மிக நீண்ட நாட்களாக அரசு அமைதி காக்கின்றது. அதனால் நாங்கள் கட்டாயமாக போராட்டத்தை தொடர்வேண்டி உள்ளது” என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.