கோட்டா அரசின் முதலாவது வெளிநாட்டு முதலீடு 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள்..!

0

புதிய அரசாங்கம் நிர்வாகத்தைப் பொறுப்பேற்ற பின்னர்,முதலாவது வெளிநாட்டு முதலீட்டுத் திட்டத்தை, பெரனியல் றியல் எஸ்டேட் ஹோல்டிங் நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.

கொழும்பு சாரணர் மாவத்தையில் பேரே-வாவி மற்றும் ஷங்ரில்-லா ஹோட்டலுக்கு அருகாமையில் அமைந்துள்ள 3 ஏக்கர் நிலப் பரப்பில் இந்த முதலீட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது இதற்காக250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படும். இதன் கீழ், 30 மாடியைக்கொண்ட வணிகக் கோபுரமொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

700 வீடுகளைக்கொண்டதாகவும் இது அமைக்கப்பட உள்ளது. இதற்கு மேலதிகமாக சில்லறை மற்றும் உணவு வர்த்தகத்திற்காக கட்டிடத் தொகுதியும் இதில் இடம்பெறவுள்ளது.

பிரதமர் மஹிந்தராஜபக்ஷ, நிதி பொருளாதார அலுவல்கள் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் இந்த நிறுவனத்திற்கு முதலீட்டுக்கான வசதிகளை மேற்கொள்வது தொடர்பில் சமர்ப்பித்த அமைச்சரவை ஆவணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டுக்கான உடன்படிக்கை கைசாத்திடப்படுவதை அடுத்து திட்டத்திற்கான காணி குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. குத்தகைப் பணமாக 43 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.