தாயின் கவனக் குறைவால் குழந்தை பலி; யாழில் சம்பவம்..!

0

சுடுநீர் தவறுதலாக கொட்டியதில் உடல் முழுவதும் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கடந்த (20) வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தை யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லினக்கபுரம் கீரிமலை பகுதியைச் சேர்ந்த கஜீபன் சகாஸ் என்ற ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

இறப்பு விசாரணைகளை வைத்திய சாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.