சீமெந்துக்கான சில்லறை விலை வர்த்தமானி அறிவிப்பு..!

0

சீமெந்துக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, உள்ளுர் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பொதி ஒன்றுக்கான அதிகூடிய சில்லறை விலை ஆயிரத்து ஐந்து ரூபாவாகும்.

சீமெந்து தூளாக இறக்குமதி செய்யப்பட்டு நாட்டில் பொதியிடப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பொதியின் அதிகூடிய சில்லறை விலை 950 ரூபாவாகும்.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மக்களுக்கு பொருளை வழங்காது பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக 1977க்கு அழைத்து முறைப்பாட்டை மேற்கொள்ள முடியும். அல்லது தலைமையக இலக்கங்களான 011-7755481, 011-7755482, 011-7755483 என்பவற்றிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.