வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியால மாணவர்கள் வரலாற்றுச் சாதனை..!

0

வவுனியா வடக்கு வலயத்தில் அமைந்துள்ள வவுனியா தரணிக்குளம் கணேஷ் வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.

இம்முறை நடைபெற்ற உயர் தரப் பரீட்சையில் அனைவரும் சித்தியடைந்து (100 ‘/,) பாடசாலைக்கும், அதிபரிற்கும், ஆசிரியர்களிற்கும் , பெற்றோர்களிற்கும், தரணிக்குளம் கிராமத்திற்கும், வவுனியா வடக்கு வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களில்,

S.பிரதீபா 2A B district rank-6,
S.தர்மினி A 2B district rank-10,
T.தனுஸ்ரிகா A 2B district rank-36 ,
K.பிரியதர்சினி ABC district rank-37,
R.சாளினி A 2B district rank- 40,
P. டனுஜா 2B C district rank -77
M. வாசுகி ABC district rank -109 ,
குறைந்த பெறுபேறு C 2S.
எனப் பெற்று வவுனியா வடக்கு வலயத்தில் சாதனை புரிந்துள்ளனர்.

அத்துடன் வவுனியா மாவட்டத்தில் வர்த்தகத் துறையில் முதலிடம் பெற்ற சாதனை மாணவன் சாதாரண தரம் வரை தரணிக்குளம் பாடசாலையில் கல்வி கற்று உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவு ஆசிரியர்கள் இன்மையால் வர்த்தகப் பிரிவு இடை நிறுத்தப்பட்டதால் உயர் கல்விக்கு புதுக்குளம் மகா வித்தியாலயம் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்களையும் இவ் வெற்றிக்குப் பாடுபட்ட அதிபர் திரு.இ. லிங்கநாதன் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரையும் பாராட்டுவதுடன் குறைந்த வளத்துடன் சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் படைக்கும் பீனிக்ஸ் பறவைகளாம் எம் மாணவர்களின் சாதனைப் பயணங்கள் தொடரும் என தெரிவித்துள்ளனர்.