இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழா வவுனியாவில்..!

0

இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை மற்றும் மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு தமிழரசுக் கட்சியின் வவுனியாஇளைஞரணி் தலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமை தாங்கவுள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மதியாபரணம் சுமந்திரன், முன்னாள் வடககு மாகாணசபை அமைச்சர் சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா, சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொள்வுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.