பாபாவிற்கு மதுவில் யாழில் அபிஷேகம்; தட்டிக் கேட்ட இளைஞனின் தாய்க்கு அச்சுறுத்தல்..!

0

யாழ். நல்லூர் நாவலர் வீதியில் இருக்கும் சீரடி சாய் பாபா கோவிலில் மதுபான போத்தல்களை படையலுக்கு வைத்து பக்தர்கள் சிலர் சர்ச்சை எற்படுத்தியுள்ளனர்.

இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், சமூக ஆர்வலர்கள் பலரும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கோவிலின் பொறுப்பாளர் மிக அசட்டையாக கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் முகநூலில் கருத்துத் தெரிவித்த இளைஞரின் தாயாரை அழும் அளவிற்கு பாபாவின் சீடர்கள் கடுமையாக அச்சுறுத்திய சம்பவமும் யாழில் இடம் பெற்றுள்ளது.