முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க குடும்பத்துடன் தலைமறைவு..!

0

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் மகேஷ் சேனநாயக்க குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டுபாயிலுள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அவர் தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இவ்விடயம் தொடர்பாக உத்தியோக பூர்வ அறிவித்தல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.