யுத்தத்தால் தந்தையை இழந்த போதும் வணிகத் துறையில் சாதித்த மாணவி..!

0

நேற்றைய தினம் வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தேவிபுரம் பகுதியை சேர்ந்த புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவிச்சந்திரன் யாழினி வணிகத் துறையில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

2009 இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தனது தந்தையை தொலைத்து காணாமல் போனவர்கள் பட்டியலில் தந்தையை தேடிக் கொண்டிருக்கும் குறித்த மாணவி, ஒரு கையை இழந்த தன்னுடைய தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் நிலையில் வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத் துறையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் இவருடைய தாயாரையும் பாராட்டி வருகின்றனர். வறுமையிலும் கணவர் காணாமல் போயுள்ள நிலையிலும் தனது இரண்டு பிள்ளைகளையம் கல்வியில் முன்னேற்றுவதற்காக கடுமையாக உழைக்கிறார் இந்த தாய்.

எனவே எத்தடை வரினும் கல்வியே எதிர்காலம் என்ற நோக்குடன் சாதித்துக் காட்டிய மாணவிக்கும், அவரின் அன்பு அன்னைக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் தமிழ்பொறி ஊடகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.