இடைநடுவில் அந்தரந்தில் சிக்கிய மக்கள்; விரைந்து மீட்ட பிரஞ்சுப் பொலிஸ்..!

0

இராட்சத சக்கரம் ஒன்று மின்சாரம் தடைப்பட்டு நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உதவிக் குழு வரவழைக்கப்பட்டது.

கடந்த வியாழக் கிழமை மாலை Roanne (Loire) நகரில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இங்குள்ள விடுமுறை கேளிக்கை மைதானம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இராட்ச சக்கரம் ஒன்றில் ஏறியிருந்த நபர்களே இவ்வாறு நடுவழியில் சிக்கித் தவித்துள்ளனர்.

19:00 மணி அளவில் தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த இராட்சத சக்கரத்தில் 24 பெட்டிகள் உள்ளன. அதில் 140 பேர் ஏறியிருந்தனர். சுற்றிக் கொண்டிருந்த சக்கரம் திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் இடைநடுவில் நின்றுள்ளது.

அத்துடன் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியிருந்ததால் நடு வானில் சிக்கியிருந்தவர்கள் அச்சத்தில் பெரும் கூச்சல் எழுப்பினர். அதைத் தொடர்ந்தே தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

பின்னர் உதவிக் குழுவினர் துஇதமாகச் செயற்பட்டு சக்கரத்தில் இருந்தவர்களை மிகுந்த சிரமத்தின் மத்தியில் காப்பாற்றினார்கள். அதன் பின்னர் அந்த கேளிக்கை மைதானம் மூடப்பட்டு, மீண்டும் நேற்று வெள்ளிக் கிழமை காலை திறக்கப்பட்டது.