சாள்ஸின் வட மாகாண ஆளுனர் கதிரைக்கும் ஆப்பு?

0

சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக திருமதி சந்திராணி ஜெயவர்த்தன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 01.01.2020 இல் கடமையேற்பார் எனத் தெரிய வருகின்றது.

சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி சார்ள்ஸை வடக்கின் ஆளுநராக நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் நிமிர்த்தமே புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என நம்பப்படுகின்றது.

திருமதி சார்ள்ஸ் வடக்கின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டிருந்த போது, அச் செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

எது எவ்வாறாயினும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் நேற்று அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் திருமதி சார்ள்ஸ் கலந்து கொண்டுள்ளார். எனவே அவர் இதுவரை ஆளுநராக நியமனம் பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை அரசாங்க அதிபராக சுமார் மூன்று இலட்சம் உள்நாட்டு அகதிகளை அரவணைத்து ஐநா செயலாளர் உள்ளிட்டோரால் பாராட்டுப் பெற்ற தமிழ் பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.