175 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 34 பாதிரியார்கள்..!

0

மெக்ஸிகோவிலுள்ள தேவாலயம் ஒன்றில் 175 சிறுமிகளிடம் 34 பாதிரியார்கள் அத்துமீறி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளன.

வட அமெரிக்கா – மெக்ஸிகோவில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பாதிரியார்களால் குறைந்தது 175 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேவாலயத்தில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக விசாரிக்கப்பட்டது. இதில், 175 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை தெரிய வந்துள்ளது.

அந்த தேவாலயத்தை உருவாக்கிய மார்சியல் மேசியல் என்ற பாதிரியார் மட்டும் 60 சிறுமிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். அவரைத் தவிர மேலும் 33 பாதிரியார்களும் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பாதிரியார் மேசியலை, பாப்பரசர் பதினாறாம் பெனடிக், கடந்த 2006ஆம் ஆண்டு ஓய்வு பெற உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளாமலேயே மேசியல் கடந்த 2008ஆம் ஆண்டு மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.