வெள்ளைவான் கடத்தல் விவகாரம்; முன்னாள் அமைச்சர் சற்று முன்னர் கைது..!

0

வைத்திய சாலையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன இது வரையில் கைது செய்யப்படவில்லையென குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பாக இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய பிரதி சொலிசிற்றர் ஜெனரல் தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை வெள்ளை வான் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக ஏற்கனவே கைதாகிய இரண்டு பேரும் எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பால் உள்ளூர் சிங்கள மக்களின் ஆதரவு பெருகிய போதும் சர்வதேச நெருக்கடிகளை எதிர் கொள்ள வே்ண்டிய இக்கட்டான நிலைக்கு கோட்டபாய தள்ளப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.