வவுனியா கோவில் புதுக்குளம் பிரதேசத்தில் கடந்த 22.12.2019 அன்று உறவினர்களுக்கு இடையிலான வாய் தர்க்கம் கைகலப்பாக மாறியதால் இளைஞர் ஒருவர் மீது இரும்புக் கதிரை கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் இடம் பெற்றது.
மேற்படி சம்பவத்தின் போது படுகாயமடைந்த நிலையில் இளைஞரொருவர் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலையில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கபட்ட 22 வயதான இளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.