தனது வீட்டுக் குப்பைக்கு தீ மூட்டிய முதியவர் யாழில் பலி..!

0

தனது வீட்டுக் குப்பைக்கு தீ மூட்டிய போது தீக்காயங்களுக்கு உள்ளான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குப்பைக்கு தீ மூட்ட முற்பட்ட போது மண்ணெண்னை விளக்கு தவறுதலாக நெஞ்சில் வீழ்ந்ததினால் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான முதியவர் யாழ் போதனா வைத்திய சாலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கத்தானை சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த சின்னத்துரை கார்த்திகேசு என்ற 85வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.