தேசிய ரீதியில் வடக்கிற்கு பெருமை சேர்த்த யாழ்.மகாஜனக் கல்லூரி..!

0

இலங்கையில் பாடசாலைக்களுக்கிடையில் நடைபெற்ற தேசிய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ் பாடசாலை ஒன்று முதலாமிடத்தை தட்டிச் சென்றுள்ளது.

கொழும்பில் கடந்த 19ஆம் திகதி தேசிய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி இடம் பெற்றது.

இதன் போது ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் யாழ்.தெல்லிபழை மகாஜனக் கல்லூரி முதலாம் இடம்பெற்று வெற்றிக் கீரிடத்தை சுவீகரித்துள்ளது.