மன்னாரில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது..!

0

கடற்படையினரின் மன்னார் ஊழல் தடுப்பு பிரிவு உதவியுடன் நேற்றைய தினம்(25) காலை மன்னாரின் பெரியகார்சல் பகுதியில் கேரள கஞ்சா 4.870 கிலோவுடன் நபர் ஒருவரை கைது செய்யப்பட்டார்.

ஊழல் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்புடன் வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் பெரியகர்சல் பகுதில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான நபரை விசாரிக்கையில், அவர் வசம் இருந்த கேரள கஞ்சா கண்டு பிடிக்கப்பட்டது, அதன்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் 28 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கேரள கஞ்சாவுடன் மன்னார் போலீசில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை தற்போது நிலவும் பாதகமான வானிலை காரணமாக தீவின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவு முழுவதும் செயல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில், அவசரகால கடற்படை குழுக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்,

வடமேற்கு கடற்படையினரின் கட்டளையின் கீழ் கல்லடி, நவகத்தேகம, சாலியவெ மற்றும் எலுவங்குலம் ஆகிய இடங்களில் 04 நிவாரண குழுக்கள்

கிழக்கு கடற்படையினரின் கட்டளையின் கீழ் பொலன்னறுவை, கிரண, மெதிரிகிரிய மற்றும் புலஸ்திபுரவில் எட்டு (08) நிவாரண குழுக்கள்

வடமத்திய கடற்படையினரின் கட்டளையின் கீழ் கல்னேவ, தபுத்தேகம, இபலோகம, ராஜங்கனை மற்றும் ஹரிகஸ்வெவில் ஒன்பது (09) நிவாரண குழுக்கள்

தெற்கு கடற்படையினரின் கட்டளையின் கீழ் செல்ல கதிர்காமத்தில் ஒரு (01) நிவாரண குழு

தென்கிழக்கு கடற்படைக் கட்டளையில் பானமவில் ஒரு (01) நிவாரணக் குழுமாக 23 நிவாரணக் குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளன.