கிளிநொச்சியில் மறு அறிவித்தல் வரும் வரை மண் அகழ முற்றாகத் தடை..!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வதற்கான அனைத்து அனுமதி பத்திரங்களும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மு.சந்திகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவித்தலை கிளிநொச்சி, முல்லைத்தீவு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு மாவட்டச் செயலகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.