யாழில் சோகம்; ஆழ்கடல் சுழிக்குள் சிக்குண்டு 31 வயதான மீனவர் பலி..!

0

யாழ். குருநகரில் ஆழ்கடல் சுழிக்குள் சிக்குண்டு மீனவரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்த விபரீதம் இடம் பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சாவக்காட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதான வடிவேல் வரதன் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தருடன் சேர்ந்து 6 மீனவர்கள் இன்று காலை கடலில் வலை வீசச் சென்றபோது, அவர் ஆழ்கடலில் சுழி ஓடி வலை வீசியுள்ளார்.

இதன்போது சுமார் 10 நிமிடங்கள் வரை அவரின் சத்தம் இல்லை என ஏனைய மீனவர்கள் தேடியபோது, சுழி இழுத்து இறந்த நிலையில் குறித்த மீனவர் சடலமாக மிதப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் மீனவரின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.