ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான பரிசுத்தொகை அதிகரிக்கப்பு..!

0

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் 20-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான பரிசுத் தொகை விவரத்தை போட்டி அமைப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதன்படி இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை 350 கோடி ரூபாயாகும்.

இது கடந்த ஆண்டை விட 13.6 சதவீதம் அதிகமாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா 20 கோடியே 31 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக கிடைக்கும்.