சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை முதல் ஆரம்பம்..!

0

கடந்த டிசம்பர் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் முதல் கட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

நாடு பூராகவுமுள்ள 82 நிலையங்களில் இது இடம் பெறவுள்ளதுடன் மதிப்பீட்டு பணிகளில் 28 ஆயிரம் பேர் ஈடுபடவுள்ளனர்.

அத்துடன் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகி 26 ஆம திகதி நிறைவடையவுள்ளது.

அதில் எட்டாயிரம் பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.