க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறு எதிர்வரும் சனிக் கிழமை..!

0

2019 ஆம்ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக் கிழமை வெளியிடக் கூடியதாக இருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஓகஸ்ட் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் தரப் பட்டியல் இம்முறை வெளியிடப்பட மாட்டாது என கல்வி அமைச்சுத் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு இடையே தேவையற்ற போட்டியை தோற்றுவிக்காமல் இருக்க இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், பல்கலைக்கழக அனுமதிக்கான தேவை கருதி தேசிய மட்டம் மற்றும் மாவட்ட மட்டத்திலான மாணவர்களின் தரவரிசை நேரடியாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.