தம்பியை காப்பாற்ற ஆற்றில் குதித்த அக்கா; இறுதியில் நடந்த விபரீதம்..!

0

அக்கா மற்றும் தம்பி இருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பிரான்சின் மொன்றி பிறிஸ்ரன் நகரில் இடம் பெற்றுள்ளது.

நேற்று செவ்வாய்க் கிழமை டிசம்பர் 24 ஆம் திகதி இச்சம்பவம் பிரான்சின் மொன்றிபிறிஸ்ரன் நகரில் இடம் பெற்றுள்ளது. இரண்டு வயதுடைய சிறுவன் ஒருவன் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.

அவனை காப்பாற்றுவதற்காக ஐந்து வயது சகோதரியும் ஆற்றில் பாய்ந்துள்ளார். எனினும் இரு பிள்ளைகளும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சோக நிகழ்வாக மாறியுள்ளது.

சம்பவத்தின் போது, உடன் இருந்த அவர்களது 35 வயது தாய் துரித உணவு விற்பனை நிலையத்துக்குச் சென்றதாகவும், அதற்கிடையில் இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்திருந்த போது நிலமை கைமீறிச் சென்றிருந்ததாகவும், அவர்களால் இரு பிள்ளைகளையும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை உள்ளூர் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.