முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலவை கைது செய்ய நடவடிக்கை..?

0

இலங்கையில் அதிமுக்கிய நபர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை முதல் மகசின் சிறைச்சாலையில் இதற்காக விசேட சிறை அறை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சிறைச் சாலையில் தடுத்து வைக்க இந்த விசேட சிறைக் கூடமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் இந்த சிறைக் கூடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த் ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையோ அல்லது வதந்தி பரப்பிய ராஜிதவையோ கைது செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன.