துஷ்பிரயோகம் செய்த முயற்சித்த நபரிடமிருந்து சிறுமியை காப்பாற்றிய இசுரு..!

0

தங்காலையில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரிடமிருந்து, சிறுமியை காப்பாற்றிய 15 வயதுடைய சிறுவன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தங்காலையில் உள்ள ஏரி ஒன்றுக்கு அருகில் நபர் ஒருவர் 10 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்துள்ளார்.

அதனை அவதானித்த இசுரு என்ற 15 வயது சிறுவன், குறித்த சிறுமியை காப்பாற்றியுள்ளதாக தங்காலை பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை காப்பாற்றிய சிறுவனை பாராட்டுவதற்காக தங்காலை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிறுமியின் பாட்டி இணைந்து அவருக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளனர்.

தங்காலையை சேர்ந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அந்த பிரதேசத்தில் சுற்றி திரியும் நபர் ஒருவரே இவ்வாறு சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். எனினும் சிறுவன் அந்த நபரை கற்களினால் தாக்கி சிறுமியை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட சிறுமி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி சந்தேக நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.