நீர்கொழும்பில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட புகலிட கோரிக்கையாளர்..!

0

நீர்கொழும்பு பகுதியில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த புகலிட கோரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் UNHCRஇல் பதிவு செய்யப்பட்ட 49 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அவர் தங்கியிருந்த வாடகை அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

எவ்வாறாயினும், உயிரிழந்தவரின் உடலில் பல வெட்டுகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.