வேலை நிறுத்தம் காரணமாக SNCF நிறுவனத்திற்கு 400 மில்லியன் யூரோ நஷ்டம்..!

0

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக SNCF நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

SNCF இன் புதிய தலைவர் Jean-Pierre Farandou தெரிவிக்கையில், ‘தாம் பொருளாதார விளைவுகளைச் சந்தித்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 5 ஆம் திகதியில் இருந்து இடம்பெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தில் ஏற்கனவே 400 மில்லியன் யூரோக்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் ஏற்பட்டுள்ள தடை மேலும் இந்த பற்றாக்குறையை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக Jean-Pierre Farandou தெரிவிக்கையில்,

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இன்னும் உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இந்த கிறிஸ்மஸ் விடுமுறைக்கு 800,000 பயணங்களை மேற்கொள்ள முடிந்ததாகவும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத ஊழியர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.