கனடாவில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

0

கனடாவில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணி நேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2 என்ற ரிக்டர் அளவுகளில் இரு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அறியக் கிடைத்துள்ள போதும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.