தாய்க் கட்சிக்குத் தாவினார்; முன்னணியின் உறுப்பினர் கிரோஜ்..!

0

வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கூமாங்குளம் வட்டார நேரடி வேட்பாளரான கிரோஜன் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டார்.

இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் இவ்வாறான கட்சி தாவல்கள் பணத்திற்கும், பதவிக்குமாக இடம் பெற்றது.

இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னணி புறக்கணிப்பை கோரியதுடன், செயலாளர் கஜேந்திரன் கோட்டாவுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும் அதனூடாகவே அவரின் சகோதரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதும் எதுவித விசாரணையோ, புனர்வாழ்வோ, நீதிமன்ற நடவடிக்கை எதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டார்.

அதுட்டுமன்றி 40,000 சவப்பெட்டிகள் தொடர்பில் இன்று வரை விசாரணை செய்யப்படவில்லை. இது தொடர்பில் அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே கேள்வி எழுப்பியிருந்தார்.

கொள்கை ரீதியாக இந்தியாவையும் சமஸ்ரியையும் எதிர்க்கும் இவர்கள் ஒரு நாடு இரு தேசம் எனும் ஒரு முரண்பட்ட கொள்கையினையும் கொண்டுள்ளனர்.

அத்துடன் தேசிய கட்சிகளுடனும், தமிழர் விரோதக் கட்சிகளுடனும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பாதீட்டை தோல்வியடையச் செய்யும் செற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை சிங்களவர் தொடர்பில் நழுவல் போக்கையும் ஒருதலைப் பட்சமாக முஸ்லீம் விரோதப் போக்கை மட்டும் கொண்ட இவர்களால் மூவினங்கள் வாழும் இலங்கையிலோ அல்லது வடகிழக்கிலோ ஒரு நாடு இரு தேசம் சாத்த்தியமாகுமா? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் இவ்வாறான நடைமுறைச் சாத்தியமற்ற இவர்களின் கட்சி தாவல் என்பது எதிர்பார்த்த ஒரு விடயம் என முகநூல் நண்பர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.