வாள் வெட்டுக் குழுக்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள்..!

0

யாழ்.மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாமைக்கு காரணம் தொடர்புடையவர்களை காவல் துறை காப்பாற்றுவதேயென பலரும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளனர்.

அரியாலையில் கடமையிலுள்ள அனைத்து பொலிஸாரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுங்கள் . பொலிஸாருக்கும் மணல் கடத்தல் காரர்களுக்கும் இடையில் நெருக்கம் உள்ளதென சட்டத்தரணி ரெமிடியஸ் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவோர் ,வீடுகளிற்குள் புகுந்து அட்டகாசம் புரிபவர்களையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துங்கள் என இன்று காலை 10 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் பிரபல சட்டத்தரணி செலஸ்ரின் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை இவரின் இந்தக் கூற்றுத் தொடர்பில் சமூகத்தில் ஆதரவானதும், எதிரானதுமான வாதப் பிரதிவாதங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அத்துடன் குறித்த சட்டத்தரணி சமூக ஆர்வலராக தனது கருத்துக்களை ஆணித்தரமாக முகநூலில் தெரிவித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.