ஜனவரி முதலாம் திகதி முதல் பேருந்துகளில் பாடல்கள் ஒலிபரப்பத் தடை..!

0

2020ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் தாம் விரும்பிய பாடல்களை ஒலிபரப்ப அரசாங்கம் தடை விதித்துள்ளது.

பேருந்துகளில் உரத்த இசையின் காரணமாக பயணிகளுக்கு உண்டாகும் அசெளகரியங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே போக்குவரத்து அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழர்களை உள்ளடக்கி சுமார் 15,000 பேரிடம் நடத்திய ஆய்வுகளில் 100 வீதமானோர் பேருந்துகளில் சத்தமாக பாடல்கள் ஒலிபரப்பாகுவதால் எரிச்சலடைவதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி பேருந்துகளில் ஒலிபரப்பக் கூடிய பாடல்களின் பட்டியலை பேருந்து உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாடல்களின் இடைநடுவே தகவல்களை ஒலிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.