உலகில் புகைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கை 120 கோடியைத் தாண்டுகிறது..!

0

உலகம் முழுவதும் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2.44 கோடியாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க சிகரெட் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2000ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 1.397 பில்லியன் மக்கள் புகைப் பழக்கத்துக்கு ஆளாக இருந்தார்கள். எனினும், 2018ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி அது 1.337 பில்லியனாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில் 2000ம் ஆண்டில் 3.46 கோடியாக இருந்த சிகரெட் புகைக்கும் பெண்களின் எண்ணிக்கை தற்போது, 2018ம் ஆண்டில் 2.44 கோடியாக குறைந்துள்ளது. மிகக் குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மத்தியில் புகைத்தல் பற்றிய அச்சம் உள்ளது. இதனால், அவர்கள் விரைவில் சிகரெட் புகைப்பதை நிறுத்திவிடுகின்றனர். ஆனால், ஐரோப்பா போன்ற பகுதிகளில் சிகரெட் பழக்கத்தை கைவிடும் பெண்களின் எண்ணிக்கையில் பாரியளவு மாற்றம் ஏற்படவில்லை.

அதேவேளை ஆண்கள் மத்தியில் சிகரெட் பழக்கத்தை கைவிடுபவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 2020ம் ஆண்டில் சிகரெட் புகைப்பதை நிறுத்தும் ஆண்களின் எண்ணிக்கை இருபது லட்சம் என்ற அளவுக்கு வரும் என்றும், 2025ல் அது 60 லட்சமாக உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை 2025ம் ஆண்டு வாக்கில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 120 கோடியாக இருக்கும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது.

சிகரெட் புகைப்பதை தடுத்து நிறுத்த உலகின் 60 சதவிகித நாடுகள் ஒத்துழைப்பை வழங்குகின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் தீவிரமாக இதில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதத்துக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.