பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து ஏற்பாடு..!

0

பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து சேவையை முறையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பயணிகளுக்கு விரைவான சேவையை வழங்கும் பொருட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் முதலாம் திகதி வரையில் இலங்கை போக்குவரத்து சாரதிகள் மற்றும் நடத்துணர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

புறக்கோட்டையில் இருந்து நாட்டின் அனைத்து பிரதேசத்திற்கும் பஸ் சேவைகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவிக்கையில் கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையில் விசேட சொகுசு ரயில் ஒன்று இன்று சேவையில் ஈடுபடுகின்றது.

இந்த ரயில் இன்று, 27 ஆம் மற்றும் 29 ஆம் திகதிகளில் பதுளையில் இருந்து கொழும்பு வரை சேவையில் ஈடுபடவுள்ளது. இதே போன்று கொழும்பில் இருந்து பதுளை வரையிலும் மேலதிக ரயில் சேவை இடம்பெறவுள்ளது.

ஏதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து காங்கேசந்துறை வரையில் சேவையில் ஈடுபடும் ரயில் மற்றும் பிற்பகல் 1.15 மணிக்கு காங்கேசந்துறையில் இருந்து கல்கிசை வரையில் சேவையில் ஈடுபடும் ரயிலில் முதலாவது வகுப்பில் குளிரூட்டப்பட்ட 44 ஆசனங்களைக் கொண்ட ரயில் பெட்டியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதில் ஆசன ஒதுக்கீட்டிற்கு ரயில்வே திணைக்களம் வசதிகளைச் செய்துள்ளது.